fbpx

வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்??? உங்களுக்கு காத்திருக்கும் பேராபத்து…

காலையில் எழுந்த உடன் டீ குடிக்காமல் என்னால் இருக்கவே முடியாது என்று கூறுபவர்களின் எண்ணிக்கை அதிகம். உணவு இல்லாமல் கூட வாழ்ந்து விடுவேன் ஆனால் டீ இல்லாமல் என்னால் ஒரு நாள் கூட இருக்க முடியாது என்று கூறும் டீ வெறியர்கள் பலர் உள்ளனர். இது போன்ற டீ வெறியர்களுக்கு, நேரம் காலம் எல்லாம் பொருட்டே கிடையாது. வெயில் சுட்டெரித்தாலும் சரி, இரவு 3 மணி ஆனாலும் சரி டீ வெறியர்கள் டீ குடிக்கத்தான் செய்வார்கள். காலையில் எழுந்த உடன் வாயில் டீயை வைக்கா விட்டால், அவர்களால் இருக்கவே முடியாது. ஆனால் நிபுணர்கள் கூறுகையில், காலையில் நாம் செய்யும் முதல் விஷயம் பாலுடன் கூடிய தேநீரை குடிப்பதாக மட்டும் இருக்கக்கூடாது என்பது தான்.

ஆம், இப்படி வெறும் வயிற்றில் பாலுடன் டீ குடிப்பதால் நமது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். தேயிலையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் நமது உடலுக்கு நல்லது தான். ஆனால் அதில் பால் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்த்து தேநீரை நாம் பாயாசம் போல் செய்து குடிப்பதால் அது நமது உடலுக்கு தீங்கை தான் விளைவிக்கும். ஆம், இப்படி வெறும் வயிற்றில் பாலுடன் டீ குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும். மேலும், இது இரைப்பை மற்றும் வாய்வு பிரச்சனைகளை உண்டாக்கும்.

டீயில் உள்ள டானின்கள், உணவில் உள்ள இரும்புச்சத்தை உறுஞ்சி விடும். வெறும் வயிற்றில் முதலில் பாலுடன் டீ குடிப்பதால், ஒரு சிலருக்கு குமட்டல் மட்டும் வயிறு எரிச்சலை ஏற்படுத்தும். கார்டிசோல் ஒரு மன அழுத்த ஹார்மோன். காலையில் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் கார்டிசோலின் அளவு அதிகரித்து, பதட்டம், நடுக்கம் மற்றும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம். தேநீரில் சர்க்கரை மற்றும் முழு கொழுப்புள்ள பாலைச் சேர்ப்பதால், கலோரி அளவு அதிகரித்து உடல் எடையை அதிகரித்து விடும்.

Read more: “காசுக்காக நீ அவன்கூட படுக்கணும்” கட்டாயப்படுத்திய கணவன்; மறுப்பு தெரிவித்த மருமகளை கடத்தி சென்று, மாமியார் செய்த காரியம்..

English Summary

hazard-of-drinking-tea

Next Post

அதிரடி..! அரசு வேலையில் சேரும் நபர்கள் பின்னணி குறித்து விசாரிக்க போலீஸ் வீட்டுக்கு வரும்...!

Sun Nov 24 , 2024
The police will come to the homes of people who join government jobs to investigate their backgrounds.

You May Like