fbpx

தினமும் பாக்கெட் பால் குடிக்கிறீங்களா? அப்போ கட்டாயம் இதை படியுங்கள்..

எல்லோர் வீடுகளிலும் பால் ஒரு முக்கியமான அங்கமாகும். ஏனெனில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாலை விரும்பி அருந்துகின்றனர். தற்போது உள்ள காலகட்டத்தில், பெரும்பாலும் பலர் பாக்கெட் பாலை தான் பயன்படுத்துகிறார்கள். இந்த பாக்கெட் பாலை தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் குடித்து வருகின்றோம். அப்படி நாம் கடையில் வாங்கும் பாக்கெட் பாலை, நன்கு கொதிக்க வைத்து அதை குடிப்பது தான் நமது வழக்கம். ஆனால், அப்படி பாக்கெட் பாலை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பாக்கெட் பாலை கொதிக்க வைத்து குடித்தால் என்ன ஆகும் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

நமது உடலுக்கு தேவையான கால்சியம், புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி12, வைட்டமின் டி, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் ரீபோஃப்ளவின் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. பொதுவாக பாலை நேரடியாக பாக்கெட்டில் அடைத்து விட மாட்டார்கள். ஏனென்றால், கேம்பிலோபாக்டர், புருசெல்லா, கரிடோஸ் போரிடியம், லிஸ்ட்டியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் பல பாலில் இருக்கும். இதனால், பாலை பாக்கெட்டில் அடைக்கும் முன்,பாஸ்டுரைசேசன் (pasteurization) செய்யப்படுகிறது. அதாவது, பால் முதலில் குளிரூட்டப்பட்டு அதன் பின் அதிக வெப்ப நிலையில் கொதிக்க வைத்து மீண்டும் குளிரூட்டப்படுகிறது.

இப்படி செய்யப்படுவதால், பாலில் உள்ள பாக்டீரியாக்கள் அனைத்தும் அழிந்து, பால் குடிப்பதற்கு பாதுகாப்பானதாக மாற்றப்படுகிறது. மேலும், பாஸ்டுரைசேசன் செய்யப்படுவதால், பால் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருப்பதோடு, பாலின் தன்மை மற்றும் சுவை அதிகரிக்கும். ஒரு பக்கம் இதில் இத்தனை நன்மைகள் இருந்தாலும், மறுபக்கம் pasteurization செய்யப்படுவதால், பாலில் உள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு குறையும். இதனால் பால் மூலம் உங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்காது. இதனால் வீடுகளில் கறக்கும் பாலை வாங்கி, நன்கு கொதிக்க வைத்த பின் பயன்படுத்துவது நல்லது. இதனால், பாலில் உள்ள நுண்ணுயிர்கள் அழிவதோடு பாலில் உள்ள கொஞ்சம் ஊட்டச்சத்துக்களும் குறையாமல் இருக்கும்..!!

Read more: ஸ்வெட்டர், சாக்ஸ் அணிந்து தூங்கவே கூடாது… ஏன் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..

English Summary

hazards-in-drinking-pocket-milk

Next Post

அதிக நேரம் போன் யூஸ் பண்றீங்களா? ஆராய்ச்சியில் வெளியான அதிர்ச்சி தகவல்!!! உடனே இதை படியுங்க..

Fri Dec 6 , 2024
disadvantages-of-using-phone

You May Like