மதுரையில் செயல்பட்டு வரும் எச்சிஎல் நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் ஹைபிரிட் முறையில் பணி செய்யலாம். இதன்மூலம் அலுவலகம் செல்லாமல் வாரம் 2 நாட்கள் வீட்டில் இருந்தும் வேலை செய்யலாம்.
பணியிடங்கள் : மதுரை எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது க்ளைவுட் இன்ஜினியர் (Cloud Engineer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
என்னென்ன தகுதி?
- இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பிரைமரி ஸ்கில் ஆக Azure ADF தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- செகண்டரி ஸ்கில்ஸ் ஆக Node.js, Python தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- இதுதவிர கல்லூரி படிப்பு தொடர்பாக எதுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. இதனால் மேற்கூறிய தகுதி உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.
இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் வாரத்தில் 3 நாட்கள் அலுவலகத்திலும், 2 நாட்கள் வீட்டில் இருந்தும் பணி செய்ய முடியும். பணிக்கான சம்பளம் குறித்த விபரம் எதுவும் தற்போதைய அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. அதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவின்போது தெரிவிக்கப்படலாம். பணி அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் சம்பளம் என்பது நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இதனால் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் முடிந்தவரை சீக்கிரம் விண்ணப்பம் செய்வது நல்லது.
Read more ; உங்கள் துணைக்கு உங்கள் மீது உண்மையில் காதல் உள்ளதா? எப்படி கண்டுபிடிப்பது? – உளவியல் பார்வை..