fbpx

இன்ப அதிர்ச்சி கொடுத்த HCL Tech நிறுவனம்! இந்த நிதிஆண்டில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை..

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான HCL Tech நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 

2023-24 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் HCL Tech நிறுவனம் 3,096 புதிய பணியாளர்களுக்கு வேலை கொடுத்தது. நான்காவது காலாண்டில், அதன் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கை 227,481 ஐ எட்டியுள்ளது. நான்காவது காலாண்டில் தேய்வு விகிதம் 12.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. இது முந்தைய காலாண்டின் 12.8 சதவீதத்தில் இருந்து சிறிது குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து இந்த நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரி ராமச்சந்திரன் சுந்தரராஜன் கூறுகையில், “2024 நிதியாண்டில் நாங்கள் 15,000 புதியவர்களை பணியமர்த்துவதை இலக்காகக் கொண்டு தொடங்கினோம். அதுதான் அந்த ஆண்டிற்கான திட்டமாக இருந்தது. மேலும் 12,000க்கும் அதிகமானவர்களைச் சேர்த்து முடித்தோம். இந்த ஆண்டு முழுவதும் எங்களிடம் இருந்த நிலையற்ற தன்மையைக் கருத்தில் கொண்டு, நாங்கள் எங்கள் புதிய பணியமர்த்தலை மறுபரிசீலனை செய்ய வேண்டியிருந்தது” என்றார்.

மேலும், ”வரவிருக்கும் ஆண்டில், நாங்கள் 10,000 க்கும் அதிகமாக பணியாளர்களை பணியமர்த்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இதே தொடர்ச்சியில் நிதியாண்டு 25க்கும் நாங்கள் ப்ளான் செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தார். நொய்டாவை தலைமையிடமாகக் கொண்ட நிறுவனம், நடப்பு நிதியாண்டில் 10,000-க்கும் மேற்பட்ட புதியவர்களை நியமிக்கவுள்ளதாக செய்தி வெளியானதை தொடர்ந்து, HCLTech ன் இந்த முயற்சிக்கு வரவேற்பு குவிந்து வருகிறது.

Next Post

சென்னையில் 100% மழை குறைவு..! வறண்ட வீராணம் ஏரி… குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமா…! குறைந்து வரும் ஏரிகள்… நிலைமை என்ன..!

Sat Apr 27 , 2024
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், வீராணம், சோழவரம், கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் ஆகிய ஆறு ஏரிகள் சென்னையின் நீர் ஆதாரமாக உள்ளது. சென்னையில் சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படுவதால் சென்னையின் நீர் அதரங்களில் நீர் மட்டம் வெகுவாக சரிந்து வருகிறது. ஏப்ரல் 26ஆம் தேதி நிலவரப்படி புழல் ஏரியின்(மொத்த உயரம் 21.20 அடி) நீர் மட்டம் 19.59 அடியாக உள்ளது. […]

You May Like