fbpx

செம்மண் கடத்தல் வழக்கு… சத்தமே இல்லாமல் மகன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர்…! என்ன நடந்தது…?

பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணியின் செம்மண் கடத்தல் வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

கடந்த 2006 -2011 திமுக ஆட்சி காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செம்மண் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் கே.எஸ்.ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது கடந்த 2012-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக திமுக எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது‌. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது எம்.பி. கவுதம சிகாமணி உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினர். அப்போது குற்றப்பத்திரிகை ஆவணங்களில் சில பக்கங்கள் தெளிவில்லாமல் இருப்பதாக அவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் இதுதொடர்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் பிப்ரவரி 13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Vignesh

Next Post

வந்தது உத்தரவு... தடையை மீறி கடலில் குளித்தால் இனி அபராதம்...! மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு...!

Fri Jan 26 , 2024
புதுச்சேரியில் தடையை மீறி கடலில் குளித்தால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுச்சேரியில் பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, ரோமேனட் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரை போன்ற கடற்கரைகள் இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் சுனாமிக்கு பிறகு கருங்கற்கள் கொட்டப்பட்டது. கடலில் இறங்கி விளையாட முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தலைமைச் செயலகம் எதிரே […]

You May Like