fbpx

“ரஃபேல் வாட்சை எனக்கு கொடுத்து இவர் தான்..” பாஜக தலைவர் அண்ணாமலை சொன்ன பரபரப்பு தகவல்..

தமிழக பாஜக தலைவர் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.. இதுகுறித்து பேசிய அண்ணாமலை தான் கட்டியுள்ள வாட்ச் 3.5 லட்சம் ரூபாய் என்றும், ரஃபேல் விமானத்தின் மூலப்பொருட்களை கொண்டு இந்த வாட்ச் தயாரிக்கப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார்..
இதை தொடர்ந்து தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உலகில் வெறும் 500 வாட்ச் மட்டுமே தயாரிக்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கும் மேல் விலை உள்ள ரஃபேல் வாட்ச்சை வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென வைத்திருக்கும் ஆட்டுப்புளுகர் கட்டி உள்ளார் என்று அதை வாங்கிய ரசீதை வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம் என்றும் கூறியிருந்தார்..

இதற்கு பதிலளித்த அண்ணாமலை ரஃபேல் கடிகாரத்தின் ரசீது தன்னிடம் உள்ளதாக கூறிவந்தார்.. இதை தொடர்ந்து ரசீது எங்கே என்று சமூகவலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.. பின்னர் ஏப்ரல் 14-ம் தேதி, ரஃபேல் கடிகாரத்தின் ரசீதுடன், தனது சொத்து மதிப்புடன் வெளியிடப்படும் என்றும், தமிழ்நாடு அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட போவதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் திமுக ஊழல் பட்டியல் நாளை காலை 10.15 மணிக்கு வெளியிடப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. DMK Files என்ற பெயரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.. .

இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது பேசிய அவர் “ நான் கர்நாடகாவில் டிஜிபியாக பணியாற்றிய போது, பெறப்பட்ட லஞ்ச பணத்தில் நான் ரஃபேல் கடிகாரத்தை வாங்கியதாக திமுக அமைச்சர்கள், செய்தி தொடர்பாளர்கள் என்னை பற்றி அவதூறு பரப்பினர்.. மேலும் எனது கை கடிகாரத்தின் ரசீதை கொடுக்க வேண்டும் என்று சவால் விடுத்தனர்.. அப்போது தான் நான் இந்த ரசீதை கொடுக்கும் போது, ஏப்ரல் 14-ம் தேதி நான் திமுக தொடர்பான முக்கிய கோப்புகளை வெளியிடுவேன் என்று கூறினேன்.. ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்சை நான் வாங்கினேன்..

சேரலாதன் ராமகிருஷ்ணன் என்ற நண்பரிடம் இருந்து, நான் ரஃபேல் வாட்சை வாங்கினேன்.. 2021 மார்ச்சில் ரபேல் வாட்சை வாங்கிய ராமகிருஷ்ணன் மே மாதம் அதை என்னிடம் கொடுத்தார்.. எனது வங்கிக்கணக்கு முதல் சம்பளம் வரை அனைத்து விவரங்களையும் வெளியிடுகிறேன்.. வீட்டு வாடகை, ஊழியர்கள் சம்பளம், காருக்கு பெட்ரோல் எல்லாவற்றையும் நண்பர்கள் தான் தருகிறார்கள்..” என்று தெரிவித்தார்.. மேலும் தனது நண்பர் கொடுத்த ரஃபேல் வாட்ச்சின் விலை ரூ.3 லட்சம் என்று அதற்கான ரசீதையும் அண்ணாமலை காட்டினார்..

Maha

Next Post

ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம்….! அரசு கடும் எச்சரிக்கை…..!

Fri Apr 14 , 2023
ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தின் மூலம் நாட்டின் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவரும், எந்த மாநிலத்திலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் மூலமாக, தங்களுடைய சொந்த மாநிலத்தை விட்டு மற்ற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்களாக வசிப்பவர்களும் தங்களுடைய பகுதியிலேயே தங்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை வாங்கிக் கொள்ள இயலும். ஆனாலும் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை என்ற திட்டத்தின் கீழ் பொருட்கள் […]

You May Like