குஜராத்தில் 182 தொகுதிகள் உள்ளன, இதில் 92 இடங்களை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். அதன்படி 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்ட தேர்தல் அகமதாபாத் உள்பட 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் நேற்று நடைபெற்றுது. நேற்றை தினம் பிரதமர் மோடி அமித்ஷா உள்ளிட்டோர் தங்களுடைய வாக்குகளை செலுத்தினர். இந்நிலையில் நேற்றைய தினம் முன்னதாக, காந்திநகரில் உள்ள இல்லத்துக்கு சென்ற பிரதமர், தனது தாய் ஹீரா பென்னை சந்தித்து பேசினார் பிறகு அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரணிப்பில் அமைக்கப்பட்ட்டுள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி தனது வாக்கை பதிவு செய்தார். இந்த நிகழ்வு ஊடகங்களில் வெளியாகி பெரிதாக பேசப்பட்டன.
இந்த நிகழ்வை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று கிருஷ்ணகிரியில் 273ம் ஆண்டு திப்பு ஜெயந்தியை முன்னிட்டு, திப்பு சுல்தான் மாநில பேரவை சார்பில் 2000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர் “குஜராத் தேர்தலில் பிரச்சாரம் முடிந்துள்ள நிலையில், பிரதமர் மோடி தேர்தல் நாளன்று தனது தாயை சந்திப்பதாக கூறி சென்றுள்ளார். இது கண்டனத்திற்குரியது. பிரச்சாரத்தின் போது சந்தித்திருக்கலாம் அல்லது வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு சந்தித்திருக்கலாம்.
அதை தவிர்த்து தேர்தல் நாளன்று அவர் தாயை சந்திப்பது என்பது திட்டமிட்டது. உள்நோக்கத்துடன் பிரதமர் மோடி செயல்படுகிறார். இது கண்டனத்துக்குரியது. மேலும் குஜராத் தேர்தல் முடிவுகள் எந்த வகையிலும் தமிழ்நாடு அரசியலில் பிரதிபலிக்காது” என்று தெரிவித்தார்.