என்னதான் உங்களுக்கு டீ பிடித்தாலும், ஒரு நாளுக்கு 10 முறை டீ குடித்தாலும், இந்த ஸ்டார்பக்ஸ் காஃபி மீது ஒரு கண் எப்போதும் இருக்கும். ஒரு முறையாவது குடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், அப்போ ஸ்டார்பக்ஸ் காஃபி அவ்வளவு சூப்பரா இருக்குமா என நீங்கள் நினைக்க வேண்டாம் அது ஒவ்வொருவரின் ரசனைக்கும், பாக்கெட்டில் இருக்கும் பணத்தையும் பொருத்தது.இந்த நிலையில் டிவிட்டரில் சந்தீப் என்பவர் ஸ்டார்பக்ஸ் மற்றும் சோமேட்டோ குறித்து போட்ட பதிவு இந்தியா முழுவதும் டிரெண்டாகியுள்ளது. அப்படி சந்தீப் என்ன செய்தார்..? ஏன் இவருடைய பதிவு இந்தியா முழுக்க டிரெண்டானது..?
சந்தீப் மால் என்பவர் ஸ்டார்பக்ஸ்-ல் காஃபி குடிக்க முடிவு செய்துள்ளார், இவருக்கு பிடித்த வென்னிலா ஸ்வீட் கிரீம் கோல்டு ப்ரூவ் காஃபி Starbucks கடையில் சுமார் 400 ரூபாய். சரி சோமேட்டோ ஆப்-ல் எவ்வளவு என தேடி பார்த்த போது இவருக்கு அடித்தது ஜாக்பாட் வெறும் 190 ரூபாய் தான். காஃபி குடிக்க ஸ்டார்பக்ஸ் கடைக்கு சென்று சோமேட்டோவில் ஆஃபர் இருக்கும் காரணத்தால், கடையிலேயே உட்கார்ந்து கொண்டு சோமேட்டோ ஆப்-ல் டெலிவரி அட்ரஸ்-ஐ ஸ்டார்பக்ஸ் கடைக்கு மாற்றிய 190 ரூபாய் இதே காஃப் ஆர்டர் செய்துள்ளார். சந்தீப் போட்ட ஆர்டர் உடனே ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆர்டர் டெலிவரி செய்ய வந்த டெலிவரி பாய் முகவரி பார்த்து குழம்பி போக அவருக்கு போன் செய்த போது சந்தீப் தான் இந்த டேபிளில் இருப்பதாக கூறியுள்ளார். உடன் டெலிவரி பாய் அந்த காஃபியை கொடுத்துள்ளார்.
சந்தீப்-ன் டிவிட்டர் பதிவு 1.1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது, மேலும் பலர் அவர் பொய் சொல்கிறார் முடிந்தால் சோமேட்டோ பில்-ஐ ஸ்கீரின்ஷாட் எடுத்து ஷேர் செய்ய கூறினார். அதற்கும் மனம் தளராத சந்தீப் இந்தா வச்சுகோ என்ற தொனியில் ஸ்கீரின்ஷாட் ஷேர் செய்தார். பணத்தை எப்படியெல்லாம் சேமிக்கலாம் என்பதில் உலகம் இந்தியாவிடம் தான் பாடம் கற்க வேண்டும். சந்தீப் செய்த செயல் சோமேட்டோவுக்கும், டாடா நடத்தும் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கும் கோபத்தை ஏற்படுத்தினாலும் இந்தியா மக்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.