பீகார் முதலமைச்சராக எட்டாவது முறையாக புதன்கிழமை பதவியேற்ற நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள்ளார்..
பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட ஐக்கிய ஜனதா கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் பிற பிராந்திய கட்சிகளின் ஆதரவுடன் பீகாரில் புதிய ஆட்சி அமைத்துள்ளது.. இன்று பீகார் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக ஆர்ஜேடியின் தேஜஸ்வி யாதவும் பதவியேற்றனர். பதவியேற்பு விழா முடிந்ததும் பேசிய முதல்வர் நிதிஷ் குமார், பிரதமர் நரேந்திர மோடியை கிண்டல் செய்தார்.. அப்போது “2014ல் வெற்றி பெற்றார், ஆனால் 2024ம் ஆண்டு குறித்து இப்போது கவலைப்பட வேண்டும்..
பாஜக கூட்டணியை வை விட்டு வெளியேறுவது என்று கட்சி இணைந்து முடிவெடுத்தது… நான் 2024 வரை நீடிப்பேனா இல்லையா என்று… அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம், ஆனால் நான் 2014ல் வாழ மாட்டேன்” என்று தெரிவித்தார்.. பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்த பேசிய நிதிஷ் குமார், “2014ல் ஆட்சிக்கு வந்தவர்கள், 2024ல் வெற்றி பெறுவார்களா? 2024 ஆம் ஆண்டு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்..” என்று தெரிவித்தார்..
இருப்பினும், 2024 மக்களவைத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் என்ற கூற்றை நிதிஷ் குமார் நிராகரித்தார். இதுகுறித்து பேசிய அவர் “ பிரதமர் பதவிக்கு நான் போட்டியிடவில்லை..” என்று தெரிவித்தார்..