தலைமை ஆசிரியர் ஒருவர், பள்ளி ஆசிரியையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கர் மாவட்டம் சாலேரா பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை ஒருவர் உல்லாசமாக இருக்கும் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. பள்ளியில் சிசிடிவி கேமரா இருப்பது கூட தெரியாமல் இருவரும் அறையில் ஜாலியாக முத்தம் கொடுத்துக் கொண்டு இருந்துள்ளனர்.
இருவரும் பணியிடை நீக்கம்
இதுதொடர்பான வீடியோ வைரலான நிலையில், தலைமை ஆசிரியர் மற்றும் பெண் ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். தலைமை ஆசிரியரின் செயலுக்கு பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, “முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. முதல்வர் மற்றும் பெண் ஆசிரியர் இருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இடைநீக்க காலத்தில், அவர்களின் தலைமையகம் தற்போதைய இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் மாற்றப்பட்டது” என்றார். மேலும், ஒரு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், உயரதிகாரிகள் பிறப்பிக்கும் எந்த உத்தரவுகளையும் நாங்கள் பின்பற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.
Read More : பேரதிர்ச்சி..!! ரூ.60,000-ஐ தாண்டிய தங்கம் விலை..!! ஒரே நாளில் ரூ.600 உயர்வு..!! நகைப்பிரியர்கள் ஷாக்..!!