நடுவானில் பறந்தபோது கேபினில் இருந்து புகை வந்ததால் ஜபல்பூர் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது..
இன்று காலை டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு ஸ்பைஸ்ஜெட் பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது.. அப்போது 5,000 அடி உயரத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் பறந்தபோது கேபினில் புகை வந்ததை பணியாளர்கள் கண்டுபிடித்தனர்.. இதை தொடர்ந்து விமானம் மீண்டும் டெல்லி திரும்பியது.. பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர்.. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் விமான சேவை தொடர்பாளர் இந்த தகவலை உறுதிப்படுத்தி உள்ளார்..
15 நாட்களில் இதுபோன்ற சம்பவம் நடைபெறுவது இது இரண்டாவது முறையாகும். ஜூன் 19 அன்று, 185 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் டெல்லி நோக்கிச் செல்லும் ஸ்பைஸ்ஜெட் விமானம், பாட்னாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, அது புறப்பட்ட சில நிமிடங்களில், அதன் கேபின் குழுவினர் இன்ஜினில் இருந்து தீப்பொறிகளை கண்டனர். இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டதாக ஸ்பைஸ்ஜெட் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..