பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டது தான் நெல்லிக்காய். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இதை விட சிறந்த உணவு கிடையாது என்றே சொல்லலாம். ஏனென்றால், இதில் அதிகமான அளவு வைட்டமின் சி உள்ளது ஒரு சிலருக்கு நெல்லிக்காயை கடித்து சாப்பிட பிடிக்காது. அவர்கள் நெல்லிக்காயை காரமான சட்னியாகவும், ஜூஸ் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை அளவை சுலபமாக கட்டுப்படுத்த முடியும். அதவாது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த முடியும் என்று என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நெல்லிக்காய், நீரிழிவு நோயாளிகளுக்கு கிடைத்த பொக்கிஷம் என்றே சொல்லலாம்.
தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிடுவதால், செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனைகளை குணமாக்கும். மேலும், நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி இருப்பதால், கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். இதனால் தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து இளமையாக இருக்க முடியும்.
அது மட்டும் இல்லாமல், நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முடியும். இதனால் இதய நோய் ஏற்படுத்தும் அபாயத்தைக் குறைக்க முடியும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், இது முடி வளர்ச்சியை ஊக்குவித்து, முடி உதிர்தலைத் தடுக்கும். இத்தனை சத்துக்கள் நிறைந்த நெல்லிக்காயை கட்டாயம் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள், ஏன் பெரியவர்களுக்கு கூட சாப்பிட பிடிக்காது. இதனால், நெல்லிக்காயை துண்டுகளாக வெட்டி, வாட்டர்பாட்டிலில் போட்டுக் கொள்ளலாம்.
Read more: இந்த கிழங்கை சாப்பிட்டா புற்றுநோய் கூட வராதாம்!!! மருத்துவர் அளித்த தகவல்.