அசைவ உணவு பிரியர்கள் பலர் உண்டு. ஆனால் பெரும்பாலும், சிக்கன் அல்லது மட்டன் சாப்பிடத்தான் விரும்புவார்கள். ஆனால் உண்மையில், சிக்கன் மட்டனை விட அதிக சத்துக்கள் மீனில் தான் உள்ளது. அதிலும் குறிப்பாக மத்தி மீனில், உடலுக்கு தேவையான ஏராளமான ஊட்டச்சத்துகள் உள்ளது என்று மருத்துவர் மைதிலி கூறியுள்ளார்.
மத்தி மீனில், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் அதிகமாக உள்ளது. இதனால், இரத்த ஓட்டம் சீராகி மாரடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். அது மட்டும் இல்லாமல், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நியாபக மறதி நோய்கள் ஏற்படாமல் தடுக்க, இந்த மத்தி மீனில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் பெரிதும் உதவும். இந்த மீனில் புரத சத்து அதிகம் உள்ளது.
இதனால், தசை வளர்ச்சி சீராக இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் கட்டாயம் மத்தி மீனை சாப்பிடலாம். இதனால் நல்ல பலன் கிடைக்கும், ஆனால், இதனை பொறிக்காமல் குழம்பாக வைத்து சாப்பிடுவது அவசியம். மேலும், இந்த மீனில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் பெலவீனம் அடையாமல் வலுப்பெறும்.
மத்தி மீனில் உள்ள இரும்புச் சத்து, இரத்த சிவப்பு அணுக்களை அதிகப்படுத்தும். மேலும், இரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது நிரந்தர தீர்வு அளிக்கும். மத்தி மீனை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும், கண்புரை, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
அது மட்டும் இல்லாமல், இந்த மீனில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட்ஸ், புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. தொடர்ந்து, ரத்த சர்க்கரை அளவை சீராக்க இந்த மீன் உதவுகிறது.
Read more: வாரம் 2 முறை இதை சாப்பிடுங்க, இடுப்பு வலி மட்டும் இல்ல, எந்த வலியும் வராது!!!