fbpx

தேனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.?!

தேனை அடிக்கடி உணவில் பயன்படுத்தி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது நம்மில் பலரும் அறிந்ததே. மேலும் தேனை பல நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்படுத்தி வருகின்றனர். தேனில் என்னென்ன ஆரோக்கிய குணங்கள் உள்ளன? எப்படி பயன்படுத்தலாம் என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க.

தேனை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் பாக்டீரியா மற்றும் வைரஸ்களால் ஏற்படும் நோய் தாக்குதல்களை தடுக்கிறது. தேனில் அதிகப்படியாக ஆன்ட்டிஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், என்சைம்கள் போன்றவைகள் உள்ளன.

மேலும் தேனில் அதிகப்படியான உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நம் உடலை சீக்கிரம் முதிர்ச்சி அடையாமல் இருக்கச் செய்கிறது. தேனிலுள்ள என்சைம்கள் செரிமான பிரச்சனையிலிருந்து ஜீரண மண்டலத்தை காக்கிறது.

எடை குறைப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் தேன் ஒன்றே போதுமானது என்று கூறப்பட்டு வருகிறது. தேனை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் எடை அதிகரிக்கிறது. மேலும் தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் தேன் கலந்து குடித்து வந்தால் எடை குறையவும் செய்கிறது இவ்வாறு பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகவும் பயன்பட்டு வருகிறது.

Rupa

Next Post

நீங்கள் பிறந்த மாதம் இதுவா!.. இதோ உங்கள் குணத்தை தெரிந்து கொள்வோம்!…

Sat Jan 6 , 2024
பொதுவாக பிறந்த மாதத்தை வைத்தே பெரியவர்கள் அவர்களுடைய குணங்களை சொல்வார்கள்.அப்படி உங்களுடைய குணத்தை பார்க்கலாம். சித்திரை : தமிழ் வருடத்தில் முதல் மாதம் சித்திரை. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் சிந்தனை நிறைந்தவர்களாக இருப்பார்கள். வைகாசி : இரண்டாவது மாதம் வைகாசி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் வையகத்தை ஆளும் திறன் உடையவராக இருப்பார்கள். ஆனி: மூன்றாவது மாதம் ஆனி. இந்த மாதத்தில் பிறந்தவர்கள் அறிவாளியாக இருப்பார்கள். ஆடி: நான்காவது மாதம் ஆடி. […]

You May Like