மலைப்பிரதேசங்களில் விளையும் மருத்துவ குணமிக்க கிழங்கு வகைகளில் முக்கியமானது பூமி சர்க்கரைவள்ளி கிழங்கு. குறிப்பாக கர்நாடகா, கொல்லிமலை, ஆந்திரா போன்ற பகுதிகளின் மலைப்பிரதேசங்களில் இந்த கிழங்கு அதிகமாக விளைகிறது. அதிக மருத்துவ குணம் உள்ள பூமி சக்கரவள்ளி கிழங்கை, நம் முன்னோர்கள் செயற்கையான மருத்துவம் இல்லாமல் சாப்பிட்டு நீண்ட ஆயுள் வாழ்ந்தனர். பூமி சர்க்கரைவள்ளி கிழங்கில் உள்ள சத்துகளையும், சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறித்தும் பார்க்கலாம்?
இந்த பூமி சக்கரை வள்ளி கிழங்கில் கால்சியம், வைட்டமின் சி, இரும்பு சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து போன்ற ஊட்டசத்துக்கள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நம்முடைய உடலை தொற்று கிருமிகள் தாக்காமல் பாதுகாப்பதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது.
மேலும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த பூமி சக்கரவள்ளி கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதை சாப்பிட்டு வந்தால் பசியை கட்டுப்படுத்தும். நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைத்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் செரிமான மண்டலத்தை நன்றாக செயல்பட தூண்டி மலச்சிக்கல் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.
குறிப்பாக ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள் இந்த கிழங்கை அடிக்கடி சாப்பிடலாம். இரும்புச்சத்து இதில் அதிகமாக இருப்பதால் இரத்தத்தில் சிவப்பணுக்களின் வளர்ச்சியை அதிகப்படுத்துகிறது. பூமி சக்கரவள்ளி கிழங்கை இதயத்தின் நண்பன் என்றும் அழைக்கின்றனர். அந்த அளவிற்கு இதயத்திற்கு ஆரோக்கியத்தை தந்து இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இவ்வாறு பல்வேறு நன்மைகள் கொண்ட இந்த அதிசய கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.