பெரும்பாலும் நமது இந்திய சமையலில் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் என்றால் அது இஞ்சி, பூண்டு, கருவேப்பிலை, கொத்தமல்லி தான். பெரும்பாலும், அனைத்து சமையலிலும் இந்த பொருள்கள் வந்து விடும். அதிலும் குறிப்பாக, இஞ்சியை நாம் சமையலுக்கு மட்டும் இல்லாமல், ஜூஸ், டீ தயாரிக்க கூட பயன்படுத்துவோம். இஞ்சி இத்தனை முக்கியமான பொருளாக இருக்க முக்கிய காரணம் அதில் உள்ள மருத்துவ குணங்கள் தான்.
இஞ்சியை நம் ருசிக்காக மட்டும் இல்லாமல், எளிதில் செரிமானம் ஆகவும் பயன்படுத்துகிறோம். இஞ்சி எரிக்கும் குணத்தை உடையது என்பதால், இது வாயு பிரச்சனைகளை குணமாகும். மேலும், இது உமிழ்நீர் சுரப்பதை அதிகரித்து பசியைத் தூண்டும். உஷ்ண குணத்தை கொண்ட இந்த இஞ்சி, எத்தனை கடினமான உணவாக இருந்தாலும் எளிதில் ஜீரணமாக்கும் தன்மை கொண்டது.
மேலும், இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது, குறிப்பாக, கால்சியம், இரும்பு சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் எ, வைட்டமின் பி, வைட்டமின் சி போன்று பல சத்துக்கள் உள்ளது. எவ்வளவு பெரிய தொப்பையாக இருந்தாலும் அதை கரைக்கும் தன்மை இஞ்சியில் உள்ளது. இதற்கு, இஞ்சி சாறுடன், சிறிது தேன் கலந்து சூடாக்கி, காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் குடிக்க வேண்டும்.
பின்னர் உடனடியாக, சிறிது வெந்நீர் குடித்து விடுங்கள். இதனால், தொப்பை சுலபமாக குறைந்து விடும். பசி ஏற்படாமல் இருக்கும் போது, இஞ்சி சாறில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடலாம். இதை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஆனால் மிக குறைந்த அளவில் மட்டுமே கொடுக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு நல்ல பசி ஏற்படும்.
உடலில் எந்த வலி இருந்தாலும், அதை குணமாக்கும் தன்மை இஞ்சியில் உண்டு. இயற்கை வழங்கிய கொடையான இஞ்சி, மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். மேலும், இது மாரடைப்பைத் தடுப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அது மட்டும் இல்லாமல், இது சளி இருமலை போக்கி, சுவாச பிரச்சனைகளை குணமாக்குகிறது.
Read more: கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க, இது தான் சிறந்த வழி; டாக்டர் சிவராமன் அட்வைஸ்..