தற்போது உள்ள கால கட்டத்தில், பலருக்கு நாம் அன்றாடம் கிச்சனில் பயன்படுத்தும் உணவுப் பொருள்களில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் குறித்து தெரிவது இல்லை. இதனால் தான் உடலில் ஏற்படும் சின்ன பிரச்சனைகளுக்கு கூட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு ஆரோக்கியத்தை மேலும் கெடுத்து விடுகிறோம். ஆனால் நமது முன்னோர் பெரும்பாலும் வீட்டில் உள்ள பொருள்களை வைத்தே பல பிரச்சனைகளை குணப்படுத்தினார்.
அந்த வகையில், பல நோய்களுக்கான மருந்தாகும் பொருளை பற்றி இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம். இதற்கு முதலில், வெந்தயம் கால் கிலோ, ஓமம் 100 கிராம் மற்றும் கருஞ்சீரகம் 50 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பொருட்களை தனித் தனியாக கருகாமல் வறுத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு தூள் செய்து விடுங்கள். பின்னர், மூன்று பொடியையும் நன்கு கலந்து ஒரே டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தப் பொடியை கண்ணாடி டப்பாவில் வைப்பது தான் சிறந்தது. இப்போது, வெதுவெதுப்பான நீரில், ஒரு ஸ்பூன் அளவு இந்த பொடியை கலந்து, இரவு நேரத்தில் குடிக்க வேண்டும். இந்தப் பொடி கலந்த நீரை குடித்த பிறகு, வேறு எதையும் சாப்பிடக் கூடாது. இதனால் இரவு உணவிற்கு பிறகு இந்த தண்ணீரை குடிப்பது நல்லது. இந்த தண்ணீரை நீங்கள் தொடர்ந்து குடித்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
குறிப்பாக, நம் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து நச்சுக்கழிவுகளும் மலம் மற்றும் சிறுநீர், வியர்வை மூலமாக வெளியேறிவிடும். இதனால் நமது உடலில் பல நாட்கள் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பு நீக்கப்படுகிறது. மேலும், நமது ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு ரத்தக்குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படும். மேலும், இருதயம் சீராக இயங்கும், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படும், கண்பார்வை தெளிவு பெரும், நல்ல முடி வளர்ச்சி உண்டாகும், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்..
Read more: கவனம்!!! இந்த ஒரு பொருளை சாப்பிட கொடுத்து, உங்க குழந்தைங்க ஆயுசு நாட்களை நீங்களே குறைச்சுராதீங்க…