fbpx

குழந்தை பாக்கியத்திற்காக ஏங்குபவரா நீங்கள்? இனி கவலை வேண்டாம்.. இந்த மூலிகையை பற்றி கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..

அவசரமான இந்த காலகட்டத்தில், சரியாக சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் கூட பலருக்கு நேரம் இருப்பது இல்லை. நேரம் இருந்தாலும், எழுந்து போய் தண்ணீர் குடிக்க சோம்பேறித்தனம். இதனால் பலருக்கு சிறுநீரகத்தில் கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் வலி, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதற்காக பலர் பல ஆயிரம் செலவு செய்வது உண்டு. ஆனால் இனி அந்த மருந்துகள் தேவைப்படாது. ஆம், உண்மை தான். மருந்து மாத்திரை இல்லாமல் சிறுநீரக கல்லை வெளியேற்ற யானை நெருஞ்சில் மூலிகை பெரிதும் உதவும். ஆம், யானை நெருஞ்சிலை காயவைத்து, உலர்த்தி கஷாயம் செய்து குடித்தால் போதும்.

நெருஞ்சில் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலுடன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரககல், எரிச்சல், விந்து நீர்த்துப்போதல், சிறுநீர் போகும் போது வலி, ஆண்மைக்குறைவு ஆகியவை நீங்கும். யானை நெருஞ்சிலை அரைத்து, நெல்லி அளவு எடுத்து தயிரில் கலக்கி, தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் நீர்க்கட்டு, நீர் எரிச்சல், வெள்ளைப்படுதல் குணமாகும். இந்த இலையின் சாறை குடித்து வந்தால், சிறுநீரகத்தில் உருவாகும் பாக்டீரியாக்கள் அழிந்து விடும். மேலும், ஆண்களுக்கு ஏற்படும் புராஸ்டேட் சுரப்பி வீக்கத்தினை சீர் செய்து புராஸ்டேட் சுரப்பியை சீராக சுரக்கச் செய்கிறது.

அது மட்டும் இல்லாமல், சிறுநீர் துவாரம், ஆண்குறி புண், ஆண் மலட்டுத்தன்மை, விந்தணு குறைபாடுகள் நீங்கும். இதனால் குழந்தை பாக்கியத்திற்காக காத்திருக்கும் ஆண்கள் இந்த இலையின் சாறை குடிக்கலாம். மேலும், பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல், பால்வினை தொற்றுநோய்க்கள் போன்ற நோய்களை குணப்படுத்தும். வெள்ளைப்படுதல் மற்றும் வயிற்றுப்புண்கள் நீங்க நெருஞ்சில் இலையை இடித்து சூரணம் செய்து அதை பாலில் போட்டு நாட்டுச் சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதனால் உங்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.

Read more: மாப்பில் இருக்கும் விடாப்படியான கறையை நீக்கி, புதுசு போல் மாற்ற வேண்டுமா?? அப்போ கட்டாயம் மாதம் ஒரு முறை இப்படி செய்யுங்க..

English Summary

health benefits of Large Caltrops

Next Post

திருமண மண்டபங்கள், அரங்குகளுக்கு மின் கட்டணம் உயர்வு..!! விளக்குகளுக்கு தனி மின் இணைப்பு..!! தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடி..!!

Wed Jan 15 , 2025
Reports have emerged that electricity charges for wedding halls and venues are set to increase.

You May Like