மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது வெள்ளை சர்க்கரை தான். உடலில் உள்ள பாதி பிரச்சனைக்கு முக்கிய காரணம் இந்த வெள்ளை சர்க்கரை தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. ஆம், நாம் அதிக அளவில் சர்க்கரை எடுத்துக்கொண்டால், உடல் பருமன், நீரழிவு, எலும்புகள் வலுவிழத்தல், கல்லீரல் பிரச்சனை, சரும ஆரோக்கியம் போன்ற பல கடுமையான நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதனால், முடிந்த வரை சர்க்கரையை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். சுமார் ஒரு மாதம் மட்டும் நீங்கள் சர்க்கரையை சாப்பிடாமல் இருந்தால், உங்கள் உடலில் பல நல்ல மாற்றங்கள் காணப்படுவதுடன், அதனால் பல ஆரோக்கிய நன்மைகள் ஏற்படும். சர்க்கரையை தவிர்ப்பது என்றால், டீ, காபி, சர்க்கரை சேர்த்த பானங்கள், குளிர்பானங்கள், பாடிலில் இருக்கும் பழச்சாறுகள், பிஸ்கட் போன்ற அனைத்து பொருட்களையும் தவிர்ப்பது ஆகும்.
சர்க்கரை உணவுககளை நீங்கள் முற்றிலும் தவிர்ப்பதால், உங்கள் உடலில் என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளுங்கள்.. நீங்க ஒரு மதாம் சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கலோரிகள் குறைந்து, உடல் எடை குறையும். மேலும், இதனால் நீங்கள் நாள் முழுவது சுறுசுறுப்பாக இருப்பீர்கள். சர்க்கரை உட்கொள்வதை முற்றிலுமாக நிறுத்தினால், கல்லீரல் பாதிப்புகள் முற்றிலும் குணமாகும்.
சர்க்கரை உட்கொள்வதை நாம் முற்றிலும் தவிர்க்கும் போது, முகப்பரு, சுருக்கங்கள் மற்றும் பிற சரும பிரச்சினைகள் குணமாகும். இவை அனைத்தையும் விட, நாம் சர்க்கரையை தவிர்க்கும் போது, பதட்டம் குறைந்து, தெளிந்த மனநிலை கிடைக்கும். அது மட்டும் இல்லாமல், சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தும் போது, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Read more: நீண்ட காலம் நோயின்றி வாழ, அடிக்கடி இந்த சட்னி சாப்பிடுங்க; ஆராய்ச்சியில் வெளியான தகவல்…