fbpx

காலையில் எழுந்த உடன் ரொம்ப சோர்வா இருக்கா? எந்த வேலையும் செய்ய முடியவில்லையா? அப்போ இந்த டீ குடிங்க…

காலையில் எழுந்ததும் உடல் சோர்வு நீங்க அனைவரும் காபி, டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருப்போம். அதற்கு பதில் இயற்கை முறையில் வீட்டிலேயே தயாரிக்கப்படும் மூலிகை டீயை குடிப்பதால் பல நன்மைகள் உண்டாகும் என மருத்தவர் நித்யா ஹெல்த் கஃபே யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

மருத்துவர் நித்யா கூறுகையில், “காலையில் எழுந்ததும் சாதாரணமாக ஏற்படும் உடல் சோர்வு, கொட்டாவி, மந்த நிலை போன்றவற்றை தாண்டி பலருக்கு உடலில் உள்ள பிரச்சனைகளால் அதிக சோர்வு உண்டாகிறது. குறிப்பாக இரத்தசோகை உள்ளவர்களுக்கு உடலில் இரத்தம் குறைவாக இருப்பதால் எப்போதும் சோர்வாகவே காணப்படுவர்.

அதேபோல் இரவில் குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், நீரிழிவு நோயால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க செல்பவர்களுக்கும் இரவில் சரியான தூக்கம் இல்லாததால் உடல் களைப்பாக இருக்கும். இவர்கள் துளசி டீயை சுலபமாக வீட்டிலேயே தயாரித்து குடிக்கலாம். இந்த டீயை குடிப்பதால் உடல் சோர்வு நீக்கி உடல் புத்துணர்வு பெறும். இதற்கு தேவையான பொருட்கள்

துளசி இலை
துளசி விதை
கடுகு
சீரகம்
கொத்தமல்லி
எலுமிச்சை சாறு
தேன்

செய்முறை :
துளசி இலைகள், துளசி விதைகளை காயவைத்து அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். அதோடு மிளகு, சீரகம், கொத்தமல்லி ஆகியவற்றையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும், இந்த பொடி கலவையை தேவைக்கேற்ப கொதிக்கும் நீரில் கலந்து அதோடு எலுமிச்சை சாற்றையும் கலந்து சிறிது நேரம் கொதிக்க விட்டு பின் வடிகட்டி பருகலாம். இனிப்பு வேண்டும் என நினைப்பவர்கள் தேன் கலந்து சாப்பிடலாம். இதனால் எப்பேற்பட்ட உடல் வலி, சோர்வை நீக்கலாம்.

Read more: மரணத்தை தவிர அனைத்து நோய்களையும் குணமாக்கும் அற்புத மருந்து.. கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..

English Summary

health benefits of tulsi tea

Next Post

"நீங்க இந்த தவறை செய்து மரணத்தை முன்கூட்டியே வரவைக்குறீங்க"..!! என்ன தெரியுமா..? ஆராய்ச்சியாளர்கள் சொன்ன பகீர் தகவல்..!!

Tue Feb 4 , 2025
If you go to sleep before 1 in the morning, what changes will happen in the human body, UK researchers have said.

You May Like