சாய்வான பகுதியில் வேகமாவோ அல்லது மெதுவாகவோ நடந்தால் உடல் எடையை குறைக்க முடியும் என ஒரு கருத்து சமீபகாலமாக இணையதளத்தில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உடற்பயிற்சி நிபுணர்களின் கருத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது பலரின் நோக்கமாக இருக்கிறது. இதற்காக பலர் குறுக்கு வழியை தேர்ந்தெடுக்க முயல்கின்றனர். பொதுவாக உடல் எடையை குறைக்க எந்தவொரு ட்ரிக்ஸ்ஸோ, ஷார்கட்டோ இல்லை என்பது நிபுணர்களின் கருத்து. சரியான முறையில் உடலில் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே உடல் எடையை குறைக்க முடியும். ட்ரெட் மில்லில் ஓடுவது போன்று சாய்வான பகுதியில் வேகமாக அல்லது மெதுவாக நடப்பதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும் என சமூக வலைத்தளங்களில் பலர் கூறி வருகின்றனர். ஜாக்கிங் மாதிரியான தீவிர உடற்பயிற்சிகள் குளுக்கோஸை முதன்மை எரிபொருளாக பயன்படுத்துகின்றன. இதற்கு மாறாக மெதுவாக நடத்தல் போன்ற எளிதான உடற்பயிற்சிகள் உடலில் கொழுப்பை குறைக்க பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் சாய்வில் மெதுவாக நடப்பது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவுமே தவிர எடை இழப்புக்கு உதவாது என்பதே நிபுணர்களின் கருத்து. எடை இழப்புக்கு முக்கியமான காரணி உடலில் கலோரி பற்றாக்குறையை ஏற்படுத்துவது. தகுந்த உடற்பயிற்சி நிபுணர்களின் கண்காணிப்பில் உடலுக்கு ஏற்றாற்போல் கலோரிகளை எடுத்து கொள்வது மட்டுமே சிறந்த தீர்வுக்கு வழிவகுக்கும்.
Read more: கணவன், மனைவி முத்தமிடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும் தெரியுமா? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்..