நடிகர் டி. ராஜேந்தர் அமெரிக்காவில் சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்..
இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டவர் டி.ராஜேந்தர். இவர் ஒரு தலை ராகம், என் தங்கை கல்யாணி, மைதிலி என் காதலி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.. இந்நிலையில், இவர் உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 19ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்த இருதயதவியல் துறை மருத்துவர்கள், அவருக்கு இருதயத்திற்கு செல்லக்கூடிய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு, அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது அவர் நல்ல முறையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே டி.ராஜேந்தருக்கு வயிற்றுப்பகுதியில் ஏற்பட்ட ரத்தக்கசிவுக்கு வெளிநாட்டில் சிகிச்சை பெற வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.. சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.. சிகிச்சைக்கு பிறகு டி. ராஜேந்தர் குடும்பத்தாருடன் ஓய்வில் இருந்து வந்தார்..
இந்த நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து மருத்துவ சிகிச்சையை முடித்துக் கொண்டு சென்னை திரும்பினார்.. மேலும், விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எனக்காக அன்பு காட்டிய தமிழக மக்கள் பிரார்த்தனையின் பலன் இது..” என்று தெரிவித்தார