fbpx

அடடே.! மாதவிடாய் கோளாறு, மார்பகப் புற்றுநோயை கட்டுப்படுத்தும் ஆளி விதை.! ஆச்சரியம் அளிக்கும் தகவல்கள்.!

நமது இந்திய சமையலில் பயன்படுத்தும் பல மூலிகைகளும் விதைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக் கூடியதாக இருக்கிறது. உணவே மருந்து என்ற நம் முன்னோர்களின் சொல்லின் படி உணவிற்கு பயன்படுத்தப்படும் பல பொருட்கள் மருந்தாகவும் அமைகிறது. அப்படி நாம் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு பொருள்தான் ஆளி விதை. இந்த விதையில் வைட்டமின்கள் புரதச்சத்து ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருக்கின்றது.

இந்த விதைகளில் நிறைந்திருக்கும் ஏராளமான நார்ச்சத்து நம் உடலின் செரிமான தன்மையை அதிகரிக்கிறது. இந்த விதைகளை பயன்படுத்துவதன் மூலம் அஜீரணக் கோளாறு போன்றவை கட்டுப்படுத்தப்படுவதோடு உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆளி விதைகளில் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் ஈஸ்ட்ரோஜெனிக் பண்புகள் உள்ளன. இவை மார்பகப் புற்றுநோய் மற்றும் ப்ரோஸ்டேட் புற்று நோய்க்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கிறது. ஆளி விதைகள் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்கு உதவுகிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய ஒமேகா-3 அமிலங்கள் மூளையின் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவற்றில் இருக்கக்கூடிய புரதச்சத்துக்கள் உடலை வலிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் இவற்றில் இருக்கக்கூடிய சத்துக்கள் நமது குடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. ஆளி விதையின் பிசின் மலச்சிக்கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய ஈஸ்ட்ரோஜெனிக் அமிலம் பெண்களின் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜன் சுரப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

Next Post

நீரிழிவு தொல்லை இனி இல்லை.! கோல்டன் ஜூஸ் பற்றி கேள்விப்பட்டு இருக்கீங்களா.! 100% ரிசல்ட்.!

Sun Dec 24 , 2023
நீரிழிவு நோய் இன்று பெரும்பாலானவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு நோயாகும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைப்பதற்கு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் சில இயற்கை முறையிலும் இதனை கட்டுப்படுத்த இயலும். இதற்கான ஒரு அற்புத மருந்து தான் கோல்டன் ஜூஸ். இந்த அற்புதமான பானத்தை அருந்துவதன் மூலம் தீவிர பாதிப்பில் இருக்கும் நீரிழிவு நோயும் கட்டுக்குள் வரும் . இந்த அற்புதமான பானம் செய்வதற்கு இரண்டு […]

You May Like