fbpx

ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தை புசுபுசுன்னு மாறனுமா??? அப்போ இந்த உணவுகளைக் கட்டாயம் கொடுக்கவும்!

ஒரு சில குழந்தைகள் என்ன தான் சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது. மிகவும் மெலிந்து இருப்பார்கள். அநேக பெற்றோர்களுக்கு இருக்கும் பெரிய கவலையே இது தான். என்ன கொடுத்தாலும் என் பிள்ளை எடை கூடவில்லை என்று புலம்பும் பல பெற்றோர்கள் உள்ளனர். அதே சமயம் ஒரு சில குழந்தைகள் பார்க்க பெருசாக, குண்டாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்காது. சத்து இல்லாத உடல் எடை வீண் தான். அதனால் குழந்தையின் உடல் எடையை கூட்டுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அவர்களின் ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதிலும் கவனம் இருக்க வேண்டும்.

அந்த வகையில், 6 மாதம் வரை தாய்ப்பாலை விட சிறந்த உணவு எதுவும் இல்லை. 6 மாதத்திற்கு பிறகு, கேழ்வரகு, நேந்திர பழம் ஆகியவற்றை கொண்டு கஞ்சி செய்து கொடுக்கலாம். வெறும் கஞ்சியை கொடுப்பதற்கு பதில், சிறிது பனங்கற்கண்டை காஞ்சியில் சேர்த்து கொடுக்கலாம். நீங்கள் தினமும் ஒரே உணவை கொடுத்தால், உங்கள் குழந்தைகளுக்கு உணவு மீது வெறுப்பு ஏற்பட்டு விடும். அதனால், குழந்தைக்கு பார்த்ததும் கவரும் படி பல வண்ணங்களை சேர்த்து கொடுக்கலாம். அதவாது, கஞ்சியில் பீட்ரூட் சாறு சேர்த்து பிங்க் நிறத்தில் கொடுக்கலாம். அல்லது கேரட் சாறு சேர்த்து ஆரஞ்சு நிறத்தில் கொடுக்கலாம். வாழைப்பழம், தேங்காய் பால் கட்டாயம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு நன்கு குழைய செய்த பருப்பு சாதத்தை நெய் விட்டு கொடுப்பது மிகவும் நல்லது. சத்து மாவில், இட்லி, தோசை, கொழுக்கட்டை ஆகியவை செய்து கொடுக்கலாம். நிலக்கடலையில் அதிக சத்துக்கள் உள்ளதால் அதனை குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே நிலக்கடலையில் மிட்டாய் செய்து கொடுக்கலாம். அல்லது சட்னி செய்து கொடுக்கலாம். மேலும், வேர்கடலையுடன் சேர்த்து பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவையை நன்கு வறுத்து அதனை போடி செய்து அதை கோளில் சேர்த்து கொடுக்கலாம். இதனால் உங்கள் குழந்தைகளின் உடல் எடை அதிகரிப்பது மட்டும் இல்லாமல், நல்ல பெலனும் இருக்கும்.

Read more: உங்கள் வீட்டில் பல்லி, கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?? அப்போ கண்டிப்பா இதை பண்ணுங்க…

English Summary

healthy-foods-for-baby-weight-gain

Next Post

கண்டம்விட்டு கண்டம்பாயும் ஏவுகணை தாக்குதல் தொடரும்!. உக்ரைனுக்கு அதிபர் புதின் பகிரங்க எச்சரிக்கை!

Sun Nov 24 , 2024
Putin Says Russia Will Continue To Test New Missile In Combat

You May Like