தமிழ்நாட்டில் வரும் 21 ஆம் தேதி வரையில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்றும், நாளையும், தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில், ஓரிரு பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.
அதேபோல 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில், தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில், ஓரிரு பகுதிகளில், லேசானது முதல், மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று சென்னையை பொறுத்தவரையில், ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரத்தின் ஓரிரு இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல், மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல், 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல், 26 டிகிரி செல்சியஸ் என்று இருக்கலாம்.
அதேபோல நாளை சென்னையில் ஓரிரு பகுதிகளில், வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல், மிதமான மழை பொழிவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல், 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல், 26 என்ற அளவிலேயே நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.