தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மத்திய வங்கக்கடல் பகுதிக்கு சென்று படிப்படியாக வலுகுறையக்கூடும். மேலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 16-ம் தேதி வரை பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர் ஆகிய 6 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ள