fbpx

Alert: நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை…! வானிலை மையம் எச்சரிக்கை…!

தென் தமிழகத்தில் வரும் 11-ம் தேதி நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்; தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும். வரும் 10-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

மேலும் வரும் 11-ம் தேதி தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், 12-ம் தேதி சில இடங்களிலும், 13-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 11-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Heavy rain in one or two places in 6 districts including Nellai…! Meteorological Department warns

Vignesh

Next Post

"நான் எப்படி நடக்கவேண்டும் என்பதை மறந்துவிட்டேன்"!. உடல்நலப் பிரச்சனைகளை பகிர்ந்து கொண்ட சுனிதா வில்லியம்ஸ்!

Sat Mar 8 , 2025
"I forgot how to walk"! Sunita Williams shares her health problems!

You May Like