fbpx

சென்னை மற்றும் அதன் புறநகர் புறநகர்ப்பகுதிகளில் கனமழை….! வானிலை ஆய்வு மையம் தகவல்…..!

தற்போது தலைநகர் சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும், விட்டு,விட்டு மழை பொழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.தலைநகர் சென்னையில், நேற்று பிற்பகல் ஆரம்பமான கனமழை, இரவு முழுவதும் பொழிந்தது. இதனால், குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால், மக்கள் மகிழ்ச்சியில் காணப்பட்டனர்.

ஆனாலும், இன்று காலை முதல், மறுபடியும் வெயில் சற்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர், சென்னை புறநகர் பகுதிகளில், மழை பொழிய தொடங்கியது.அதாவது, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான, திருவொற்றியூர், எண்ணூர், மணலி போன்ற பகுதிகளில், விட்டு, விட்டு கன மழை பொழிந்து வருகிறது.

மேற்கு திசை காற்று மற்றும் தென்மேற்கு திசை காற்றும் சந்தித்ததன் காரணமாகத்தான், இந்த திடீர் கனமழை பொழிந்து வருகிறது என்று, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

அதன்படி, இன்று, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற 5 மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில், கனமழை பொழிய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையத்தால் கணிக்கப்பட்டு இருக்கிறது.

Next Post

அடுத்த சாதனை படைக்கப்போகும் இஸ்ரோ..!! சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா - எல்1..!! எப்போது விண்ணில் பாய்கிறது..?

Mon Aug 14 , 2023
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா – எல்1 விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 விண்கலம் எல்விஎம்-3 எம்-4 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஜூலை 14ஆம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் ஆகஸ்ட் 23ஆம் தேதி விண்கலம் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்நிலையில் அடுத்ததாக இஸ்ரோ, சூரியன் குறித்த ஆய்வில் ஈடுபடவுள்ளது. இதற்காக ஆதித்யா- எல்1 […]

You May Like