fbpx

வானிலை எச்சரிக்கை…! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று இந்த 6 மாவட்டத்தில் கனமழை…!

தமிழகத்தில் நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 6 மாவட்டத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

24.09.2023 முதல் 26.09.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 27,28 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Vignesh

Next Post

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரிக்குமா.....?

Sat Sep 23 , 2023
இன்றளவும், நாம் ஏதாவது உடல் உபாதைகள் என்று மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் சொல்லும் எளிதான தீர்வு தண்ணீர். நம் உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளை நீக்குவதற்காக மருத்துவர்கள் அடிக்கடி தண்ணீர் குடிக்க சொல்வார்கள். அந்த அளவிற்கு தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில், காலையில் எழுந்தவுடன், வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், செரிமான மண்டலம் மேம்படும். அதோடு பசி நன்றாக எடுக்கும் ஆகவே […]

You May Like