fbpx

Alert: அடுத்த 3 நேரம் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொட்டப் போகும் கனமழை…!

தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 20 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. மத்திய மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தெற்கு, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Heavy rain is going to pour in 20 districts of Tamil Nadu for the next 3 hours

Vignesh

Next Post

செல்பி மோகம்.. அருகே ரயில்.. 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி!! நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சி!!

Mon Jul 15 , 2024
A harrowing video of a couple jumping into a 90-foot ditch after an oncoming train while taking a selfie from the railings above a bridge has gone viral on the internet.

You May Like