fbpx

நவம்பர் 19ம் தேதி இருக்குது கச்சேரி…!! வானிலை அறிவிப்பு…

நவம்பர் 19ம் தேதி தமிழகத்தில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக உள்ளது. எனவே 19ம் தேதி மற்றம் 20ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்கக்கடலில் கடந்த வாரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுபெற்று அரபிக்கடல் நோக்கி சென்றது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை வெளுத்துவாங்கியது. சீர்காழி உள்ளிட்ட இடங்களில் இன்னமும் வெள்ள நீர் வெளியே செல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள அந்தமான் கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக வரும் நவம்பர் 19,20 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், 19ம் தேதி மீண்டும் மழை தொடங்கும் மழை படிப்படியாக தீவிரமடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் இருந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் பகுதிக்கு 18ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Post

வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள் கூட வெடிக்கும்… இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் எச்சரிக்கை!!

Wed Nov 16 , 2022
எக்காரணத்தைக் கொண்டும் எரியாத பல்புகள், ஃபியூஸ் ஆன ட்யூப் லைட்டுகள், ஸ்பீக்கர் காந்தங்கள் உள்பட எக்காரணத்தை கொண்டும் சேமித்து வைக்காதீர்கள். ஏன் என்ற காரணத்தை இங்கே பார்க்கலாம்… வீட்டில் பழைய பொருட்களை வைத்துக் கொள்ளக் கூடாது. குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவற்றை மட்டும் வீட்டில் வைத்துக்கொள்ள கூடாது எனவும் இதில் அப்படி என்ன ஆபத்து உள்ளது என இந்த பதிவில் விளக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் பொருட்களை நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். […]

You May Like