தமிழ்நாட்டில் இன்று 19 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர், கடலூர், சேலம், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அதோடு பிற்பகலில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களிலும் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது.
இதனை அடுத்து, தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு நாளை மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து, நாளை ராணிப்பேட்டை, நீலகிரி, காஞ்சிபுரம், கோவை, திருவள்ளூர் போன்ற மாவட்டங்களின் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படுமா? என மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். சமீபத்தில் கனமழை என் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்ட நிலையில், நாளை மழையை பொறுத்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தெரிகிறது.