fbpx

மெக்காவை புரட்டிப்போட்ட கனமழை!. வெள்ளத்தில் அடித்துச்செல்லும் வாகனங்கள்!. மக்கள் நடமாட தடை விதிப்பு!

Mecca: சவுதி அரேபியாவில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் மெக்கா, மதீனா உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

உலகெங்கும் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனா புனித தலங்கள். இந்த பகுதிகளில் பெரும்பாலும் பெரு வெள்ளம் ஏற்படும் அளவுக்கு மழை பெய்வது இல்லை. ஆனால் தற்போது அங்கு நிலைமை மாறிவிட்டது. சமீபத்தில் பெய்த பெருமழையால் மெக்கா மற்றும் மதீனாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. ஜித்தா நகரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆலங்கட்டி மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மழையைத் தொடர்ந்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பேய்மழை காரணமாக சவுதி அரேபியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கின. இன்றும் பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மிதமான முதல் கனமழை, இடியுடன் கூடிய மழை மற்றும் புழுதிப் புயல் வரலாம் என்று அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது. நேற்று பெய்த கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகள் அல்உலா மற்றும் அல்-மதீனா. அல்-மதீனாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு மிகவும் புனிதமான இடங்களில் ஒன்றான மஸ்ஜித்-இ-நபவியும் மழையால் வெள்ளத்தில் மூழ்கியது. அந்த பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மசூதியின் உட்புறம் மழை வெள்ளம் புகுந்துள்ளது. சாலைகளிலும் வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. இதனால் சவுதியில் பல இடங்களில் மக்கள் நடமாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: அந்தரங்க உறுப்புகளில் மச்சம் உள்ளதா?. ஆயிரத்தில் ஒருவருக்குதான் அப்படி நடக்குமாம்!. விளைவு என்ன தெரியுமா?

English Summary

Heavy rain that overturned Mecca! Flooded vehicles! Prohibition of movement of people!

Kokila

Next Post

Champions Trophy 2025 : ICC சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணிக்கு புதிய கேப்டன்..!! கழட்டிவிடப்பட்ட ரோஹித்..

Wed Jan 8 , 2025
New captain for Indian team for ICC Champions Trophy

You May Like