fbpx

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை..!! வானிலை மையம் அலெர்ட்..!!

தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 16ஆம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று (17-11-2023) காலை 05.30 மணியளவில் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ‘மிதிலி’ புயலாக வலுப்பெற்றது. பின்னர் காலை 8.30 மணியளவில் வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் பாரதீப்பிலிருந்து (ஒடிசா) சுமார் 2 கிமீ கிழக்கு-வடகிழக்கே, டிகாவிலிருந்து (மேற்கு வங்கம்) சுமார் 180 கிலோ மீட்டர் கிழக்கு-தென்கிழக்கே, கேப்புபாராவிலிருந்து (வங்கதேசம்) சுமார் 180 கிலோ மீட்டர் தென்மேற்கே நிலை கொண்டு பின்னர் நேற்று பிற்பகல் கரையை கடந்தது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், கடலூர், மயிலாடுதுறை, நாகை ஆகிய 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

ஷாருக்கான் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் புதிய படம்… அட்லீ வெளியிட்ட அட்டகாசமான அப்டேட்

Sat Nov 18 , 2023
தமிழ் சினிமாவின் இளம் வெற்றி இயக்குனர் அட்லீ. இவரது இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகி பாபு மற்றும் பிரியாமணி ஆகியோரின் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதுவரை இந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தும் சாதனை படைத்திருக்கிறது. முதலில் இந்த திரைப்படத்தில் தளபதி விஜய் கௌரவ தோற்றத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. […]

You May Like