fbpx

இந்த 6 மாவட்டத்தில் இன்று கனமழை…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை…!

குமரிக்கடல் மற்றும் தமிழகப் பகுதிகளின் மேல் ஒருவளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, ஈரோடு,கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மற்றும் சேலம் மாவட்டங்களிலும், நாளை மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறுநாள் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், 4-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 6-ம் தேதி வரை ஒருசில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English Summary

Heavy rain today in 6 districts

Vignesh

Next Post

சீனா ஓபன் டென்னிஸ்!. உலகின் NO.1 வீரர் ஜானிக் சின்னர் அரையிறுதிக்கு தகுதி!

Tue Oct 1 , 2024
World No. 1 Jannik Sinner Joins Carlos Alcaraz & Daniil Medvedev In China Open Semis

You May Like