fbpx

9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. மீனவர்கள் கடலுக்க்கு செல்ல வேண்டாம்..

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ ஆந்திர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுச்சேரி, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது..

வரும் 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேக மூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது/ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

தமிழக மற்றும் ஆந்திர கடலோர பகுதிகள், அதனை ஒட்டிய தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடற்கரை பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தென் கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.. எனவே இன்று முதல் வரும் 4-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

காதலியை கர்ப்பமாக்கி கொடூரமாக அடித்துக் கொன்ற இளைஞர்... அதிர்ச்சி சம்பவம்..!!

Fri Sep 30 , 2022
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பம் மாவட்டம் ஹல்டியா கிராமத்தில் வசித்து வருபவர் 21 வயதான இளம்பெண் அந்த பகுதியில் உள்ள ஒரு இளைஞரை காதலித்து வந்தார். இந்நிலையில், அந்த இளம்பெண் சமீபத்தில் கர்ப்பமாகி உள்ளார். இதனால் அந்த பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள சொல்லி கர்ப்பத்திற்கு காரணமான காதலனை வற்புறுத்தியுள்ளார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் அவருடைய காதலன் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு காதலனிடம் […]

You May Like