fbpx

இன்னும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும்… வானிலை மையம் முக்கிய தகவல்..

தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக கடலோரப்பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ ஆகிய மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை மறு தினம், தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுஇகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

வரும் 25, 26 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, கடலூர்‌, புதுக்கோட்டை, நீலகிரி, கோவை, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌.

குமரிக்கடல்‌ பகுதிகள்‌, மன்னார்‌ வளைகுடா, தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகள்‌ மற்றும்‌ இலங்கையை ஒட்டிய தென்‌ மேற்கு வங்கக்கடல்‌ பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள்‌, கேரள – கர்நாடக கடலோரப்பகுதிகள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்‌ மற்றும்‌ மத்திய கிழக்கு அரபிக்கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கி.மீ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.. எனவே இன்று முதல் வரும் 24-ம் தேதி வரை மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

Maha

Next Post

’மகனுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா’..! குஷியில் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம்..!

Mon Aug 22 , 2022
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி தங்களது மகனுக்காக ஒன்றிணைந்து புகைப்படம் எடுத்துள்ளது அவர்களது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் தனுஷ் மற்றும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த ஜனவரி மாதம் தங்களது திருமணப் பந்தத்தில் இருந்து ஒருமித்த கருத்துடன் விலகுவதாக அறிவித்தனர். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் பிரிந்து வாழ உள்ளதாக அறிவித்தப் பிறகு, அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வந்த நிலையில், தங்களது […]
’மகனுக்காக மீண்டும் ஒன்று சேர்ந்த தனுஷ்-ஐஸ்வர்யா’..! குஷியில் ரசிகர்கள்..! வைரல் புகைப்படம்..!

You May Like