fbpx

உஷார்..! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை…!

இன்று சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வரும் 15-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

English Summary

Heavy rain with thunder and lightning till 10 am in 4 districts including Chennai

Vignesh

Next Post

உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!. தமிழகம் நோக்கி வரும் புயல்!. இந்த மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!

Tue Nov 12 , 2024
A low pressure area has formed! The storm coming towards Tamil Nadu! Heavy rain warning in these districts!

You May Like