மலேசியாவின் லுமுட் நகரில் 2 கடற்படை ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளானது.2 ஹெலிகாப்டர்களும் பயிற்சியில் ஈடுபட்டபோது விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் கடற்படையைச் சேர்ந்த 10 வீரர்கள் பலியாகினர்.
ராயல் மலேசியன் கடற்படை அணிவகுப்புக்கான இராணுவ ஒத்திகையின் போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர். இரண்டு ஹெலிகாப்டர்கள் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, ஹெலிகாப்டர்களில் ஒன்று மற்றொன்றின் ரோட்டரை மோதிய, காட்சிகள் உள்ளூர் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.
மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளம் உள்ளது. ஹெலிகாப்டர்களில் ஒன்று, ஏழு பேருடன் HOM M503-3, ஓடும் பாதையில் மோதியது. Fennec M502-6 ரக விமானம், அருகிலுள்ள நீச்சல் குளத்தில் மோதி விபத்துக்குள்ளானது. உள்ளூர் நேரப்படி 09:50 மணிக்கு சம்பவம் நடைபெற்றது. மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.