இருசக்கர வாகனங்களில் வரும் அனைத்து துறைஅரசு ஊழியர்கள், அலுவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும். வராதவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரித்துள்ளார்.
ஹெல்மெட் அணியாததால் ஏற்படும் உயிரிழுப்புகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. இதன் காரணமாக கட்டாய ஹெல்மெட் செய்ய வேண்டும் நான் காவல்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இருசக்கர வாகனங்களில் வரும் அனைத்து துறைஅரசு ஊழியர்கள், அலுவலர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து வரவேண்டும். வராதவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப் எச்சரித்துள்ளார்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; திருவள்ளூர் மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தி, சாலை விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு, அனைத்து துறை அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் தலைகவசம் அணிந்து வரவேண்டும். மேலும், அனைத்து துறை அரசு ஊழியர்கள், அலுவலர்கள் தலைகவசம் அணிந்து வருவதை அந்தந்த துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களில் வரும் அரசு ஊழியர் மற்றும் அலுவலர் மீது, சாலை பாதுகாப்பு விதிகளின்படி காவல் துறை வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்