fbpx

மக்களே…! இனி இதற்கான நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும்…! தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு…!

மனித – வனவிலங்கு மோதல் உயிரிழப்புக்கான நிவாரணத்தை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மனித வனவிலங்கு மோதல்களை குறைக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் மனித -வனவிலங்கு மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு 3.11.2021 அன்று அரசாணை வெளியிட்டது.

அதன்படி இத்தகைய மோதல்களில் மனித உயிர் இழப்பு அல்லது நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. இந்த இழப்பீடு கோரிக்கைகளை உடனடியாக வழங்குவதற்காக தமிழ்நாடு அரசு 10 கோடி ரூபாய் நிறும நிதி (Corpus Fund) ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மனித – வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன.

இந்நிலையில், மனித – வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு கூடுதல் நிவாரண உதவித் தொகை வழங்கிட வேண்டுமென அரசுக்கு முறையீடுகள் வந்துள்ளன. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த முறையீடுகளை மிகுந்த பரிவுடன் பரிசீலனை செய்து இத்தகைய நிகழ்வுகளில் பாதிக்கப்படும் குடும்பங்களின் சிரமங்களைக் களைவதற்காக, மனித உயிர் இழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான இழப்பீட்டுத் தொகை ரூபாய் 5 லட்சம் என்பதை ரூபாய் 10 லட்சமாக இரு மடங்கு உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். இது உடனடியாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

பணம் கையில் வந்த வேகத்தில் செலவாகிடுதா.! இந்த சிறு சிறு தவறுகளை இனி செய்யாதீங்க.!?

Sun Jan 14 , 2024
நம் அடிப்படை தேவைகளை செய்து கொள்வதற்கு கூட பணம் ரொம்ப முக்கியமானதாக இருந்து வருகிறது. பணம் இருந்தால் உலகத்தில் எதை வேண்டுமானாலும் விரும்பியதை செய்யலாம். பிறப்பு முதல் இறப்பு வரை பணத்தின் தேவையை தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. பணம் வந்தவுடன் நாம் செய்யும் சில தவறுகள் பணம் கையில் தங்காமல் சீக்கிரம் செலவாகிவிடும். அவ்வாறு நாம் செய்யும் தவறுகள் என்ன என்பது குறித்தும் பணத்தை சேமிக்க என்ன செய்யலாம் […]

You May Like