நம் உடலில் இருக்கக்கூடிய பல பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் முக்கிய காரணமாக அமைவது கெட்ட கொழுப்புகள். மாரடைப்பிற்கு உடலில் கொழுப்புகள் சேருவதே முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் இவற்றால் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளும் உருவாகிறது. குறிப்பாக 40 வயதிற்கு மேல் கெட்ட கொழுப்புகளை தவிர்ப்பதும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதும் அவசியமாகிறது. இதன் மூலம் நமது ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் இதய நோய் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ளவும் உதவும்.
உடலிலிருக்கும் கெட்ட கொழுப்புகளை வெளியேற்றுவதற்கும் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் இருப்பதற்கும் நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். இவை செரிமானத்தை அதிகப்படுத்துவதோடு உடல் எடை குறைப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் கெட்ட கொழுப்புகள் உடலில் சேராமல் பார்த்துக் கொள்கிறது. நம் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலமும் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுக்கலாம். மேலும் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்புகள் படிவதை தடுக்கலாம்.
டிடாக்ஸ் பானங்கள் என்று அழைக்கப்படும் உடலில் நச்சுக்களை வெளியேற்றும் பானங்களை பருகுவதன் மூலம் உடலின் நச்சுத்தன்மை வெளியேறுவதோடு கெட்ட கொழுப்புகளும் வெளியேற்றப்படுகிறது. பெரும்பாலும் உணவு சரியாக ஜீரணமாகாமல் கொழுப்புகளாக உருவாகிறது. எனவே உணவு சாப்பிடும் போது அதனை நன்றாக மென்று சாப்பிடுவதன் மூலம் உடலின் செரிமான சக்தியை அதிகப்படுத்தலாம். எளிதானது முதல் மிதமான உடற்பயிற்சிகளை கடைப்பிடிக்கலாம். மேலும் உடலில் கெட்ட கொழுப்புகள் தங்காமல் இருக்க காலை உணவு கட்டாயமாகும்.