fbpx

#JustIn : அதிமுக பொதுக்குழு நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி.. ஓபிஎஸ் கோரிக்கை நிராகரிப்பு…

இன்று நடைபெற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. மேலும் “பொதுக்குழு கூட்டத்திற்கு 15 நாட்களுக்கு முன்பாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பு நேற்று மாலை தான் தனக்கு கிடைத்தது. அதன் அடிப்படையில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் கூட்டப்படும் பொதுக்குழுக்கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்” என்று மனுவில் கோரியிருந்தார்.

General secretary post will be revived, says AIADMK amid EPS-OPS tussle -  The Week

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக் கழக நிர்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி, எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் கடந்த 8-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், ஒருங்கிணைப்பாளர் பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடராமல், பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்கல் கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேணடும் என எடப்பாடி தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி, ஓபிஎஸ் தரப்பு வாதங்களை கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜூலை 11ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு ஒத்திவைத்தார்..

இந்நிலையில் பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.. மேலும், பொதுக்குழுவில் விதிகள் மீறப்பட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் கூறினார்.. பொதுக்குழு நடத்த தடை கேட்ட ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்..

உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, வானகர பொதுக்குழு மேடையில் எடப்பாடி பழனிசாமி ஏறினார். இதையடுத்து பொதுக்குழு தொடங்கியது.. ஆனால் பொதுக்குழுவை புறக்கணித்த ஓபிஎஸ், தற்போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருக்கிறார்.. அங்கு ஓபிஎஸ் – இபிஎஸ் இடையே மோதல் நடைபெற்று வருவதால் பதற்றம் நிலவுகிறது..

Maha

Next Post

#Job; BOB வங்கியில் வேலை வாய்ப்பு...! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Mon Jul 11 , 2022
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager உள்ளிட்ட பணிகளுக்கு என மொத்தம் 300-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 25 முதல் 45 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Finance போன்ற பாடபிரிவில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி டிகிரி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் 5 […]

You May Like