fbpx

நீட் தேர்வு விடைத்தாளை மாணவிக்கு காண்பிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு ….

நீட் தேர்வு விடைத்தாளில் குறிப்பிட்டிருந்த மதிப்பெண்களை விட குறைவாக மதிப்பெண் பட்டியலில் குறிப்பிட்டுள்ளது தொடர்பாக வழக்கு தொடர்ந்த மாணவிக்கு உண்மையான விடைத்தாளை காண்பிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்மா விக்டோரிய என்ற மாணவி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

கடந்த ஜுலை மாதம் நடந்த நீட் தேர்வுக்கான விடைத்தாள்கள் ஜூலை 31ம் தேதி வெளியானது. அதில் அந்த மாணவி 196/720 மதிப்பெண்கள் எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. பின்னர் செப்டம்பர் 7ம் தேதி வெளியான நீட் தேர்வு மதிப்பெண் பட்டியலில் 65 மதிப்பெண் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .

இதனால் குழப்பம் அடைந்த மாணவி முறையாக மதிப்பிடப்பட்டுள்ளதா என்பதில் குழப்பம் அடைந்தார். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் நொய்டாவில் உள்ள தேசிய முகமை அலுவலகத்திற்கு வந்தால் விடைத்தாளை சரிபார்ப்பதற்காக காண்பிக்க தயாராக இருப்பதாக தேசிய முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி , நொய்டாவின் தேசிய முகமையில் விடைத்தாளை காண்பிக்கும் தேதியை இன்னும் 10 நாட்களில் அறிவிக்கும் தேதியை மனு தாரருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டுள்ளார்

Next Post

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்க அறிவுறுத்தல்….

Mon Oct 3 , 2022
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுக்கள் தொடர்பான விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆன்லைன் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களால் ஏராளமானோர் தங்கள் செல்போன்களில் பதிவிறக்கம் செய்து விளையாடத் தொடங்குகின்றனர். இதனால் விளையாட்டுக்கு அவர்கள் அடிமையாகின்றனர். ஒரு வேளை அதில் தோல்வியடைந்தால் ஏற்றுக் கொண்டு வெளியேற விரும்புவதில்லை. குறிப்பிட்ட சூதாட்ட செயலிக்கு தங்களை முழு அடிமையாக்கிக் கொள்கின்றனர். இதனால் ஏராளமானோர் கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியை நாடுகின்றனர். சிலர் […]

You May Like