fbpx

அதிவேக பயணம்..!! பைக்கை உடனே நிறுத்த இந்த வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!!

இந்திய சாலைகளில் கார்களை விட இருசக்கர வாகனங்களே அதிகம். ஏனென்றால், அன்றாட அலுவலகங்களுக்கு பைக்கை பயன்படுத்துவோர் தான் இந்தியாவில் அதிகம். அப்படி நெரிசல் நிறைந்த சாலைகளில் வாகனங்களை அடிக்கடி நிறுத்த வேண்டி வரும். அப்படி பிரேக் போடும் போது சில எளிய வழிமுறைகளை நாம் கையாண்டாலே சிறு விபத்துகள் ஏற்படாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். அந்த வழிமுறைகளை இந்தப் பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

பைக்கை நிறுத்தும்போது முதலில் பிரேக்கை அழுத்த வேண்டுமா அல்லது கிளட்சை அழுத்த வேண்டுமா என்ற குழப்பம் அடிக்கடி நமக்கு ஏற்படும். பைக்கை நிறுத்தும்போது முதலில் பிரேக்கை அழுத்துவதா அல்லது கிளட்ச்சை அழுத்துவதா என்பது பிரேக் போடும் சூழ்நிலையைப் பொறுத்தது. அதாவது, நீங்கள் எங்கு பிரேக் போடுகிறீர்கள், ஏன் பிரேக் போடுகிறீர்கள், பிரேக் போடும்போது பைக்கின் வேகம் என்ன, பைக் எந்த கியரில் உள்ளது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு அமைக்கிறது.

முதல் நிலை : நீங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டாலோ அல்லது விலங்குகள் எதிரில் வந்தாலோ அல்லது எதிரே வரும் வாகனம் திடீரென்று நின்றாலோ, அப்போது பைக்கை முழுவதுமாக நிறுத்த வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் முதலில் கிளட்சை அழுத்தி பின்னர் பிரேக்கை அழுத்துவது முக்கியம். இது உங்கள் பைக்கை நிறுத்தும். ஆனால் எஞ்சின் ஆஃப் ஆகாது.

இரண்டாவது நிலை : உங்கள் பைக் நல்ல வேகத்தில் சென்று கொண்டிருந்தால் நீங்கள் பைக்கின் வேகத்தைக் குறைக்க மட்டுமே பிரேக் போடுகிறீர்கள். அதாவது பைக்கை நிறுத்தும் எண்ணம் உங்களுக்கு இல்லை என்றால், அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பிரேக் மட்டுமே பயன்படுத்தலாம். இதற்குப் பிறகு, கிளட்சைப் பயன்படுத்தி கியரைக் குறைக்கலாம். பைக்கின் வேகத்தைக் குறைப்பது நல்ல நடைமுறை ஆகும்.

மூன்றாவது நிலை : நீங்கள் மணிக்கு 50 – 60 கிலோமீட்டர் வேகத்தில் செல்கிறீர்கள். இந்த நேரத்தில், சில காரணங்களால், உங்கள் வேகத்தை மணிக்கு 10 – 15 கிலோமீட்டர் வரை குறைக்க வேண்டும் என்றால் கிளட்சை அழுத்த வேண்டிய அவசியமில்லை. லேசாக பிரேக் போட்ட பிறகு, த்ரோட்டில் பயன்படுத்தி பைக்கின் வேகத்தைக் குறைக்கலாம்.

நான்காவது நிலை : நீங்கள் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியிலோ அல்லது நெடுஞ்சாலையிலோ இருந்தால் எந்த வேகத்தில் பைக் சென்று கொண்டிருந்தாலும், நீங்கள் திடீரென்று பைக்கை நிறுத்த வேண்டியிருந்தால், கிளட்ச் மற்றும் பிரேக் இரண்டையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தலாம். இதன் மூலம் உடனடியாகவும் பாதுகாப்பாகவும் நம்மால் பைக்கை நிறுத்த முடியும். இது போன்ற சில எளிய வழிமுறைகளைத் தெரிந்து வைத்துக்கொண்டு அதைப் பயன்படுத்தினாலே நம் பைக் பயணம் பாதுகாப்பாக அமையும். சாலையில் பைக் ஓட்டும் போது ஹெல்மட் அணிந்து பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும்.

Chella

Next Post

’அப்படியெல்லாம் இல்லைன்னு சொல்லிட்டு இப்படி பண்றீங்களே’..? தமன்னாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்..!!

Wed Apr 26 , 2023
கல்லூரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானவர் தமன்னா. அதன்பிறகு அஜித், சூர்யா, விஜய் என டாப் நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தற்போது தமிழில் தமன்னாவிற்கு படங்கள் குறைய துவங்கியதும், வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே விஜய் உடன் தமன்னா தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டார். இவர் மட்டுமல்ல அவர் சேர்ந்து நடிக்கும் எல்லா நடிகர்களும் தமன்னா மீது கிரஷ் உடன் இருந்திருக்கிறார்கள். […]

You May Like