fbpx

#Breaking: 13,000 ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு…!

13000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள அனைத்து வகை ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்ப தமிழக அரசு கடந்த வாரம் உத்தரவிட்டது. 13,000 ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழு மூலம் நியமனம் செய்ய கல்வித்துறை உத்தரவிட்டது. இந்த பணிக்கு 7500 ரூபாய் முதல் 12,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படது. ஜூலை 1-ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது இது ஆசிரியர் பணியை எதிர்நோக்கி காத்திருக்கும் தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த தற்காலிக பணி நிலையத்தை நிறுத்தி வைக்க வேண்டுமென சென்னை மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்காலிக பணியிடங்களை எல்லாம் செய்வதற்கு இடைக்கால தடை விதித்தது. இந்நிலையில் 13,000 தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை ஆணையம்.

அதன்படி, TET முடித்தவர்கள் 4-ம் முதல் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். அனைத்து அரசு பள்ளிகளிலும் விவரங்களை எல்லாம் அறிவிப்பு பலகையில் இன்று வெளியிட வேண்டும் என்றும், ஆசிரியர்களின் பணி நியமனம் திருப்தி அளிக்கவில்லை என்றால் உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். மேலும் வருகின்ற 6-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தனது சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு.. புதிய விதி அறிமுகம்.. விவரம் உள்ளே..

Sat Jul 2 , 2022
தனது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி முக்கிய மாற்றங்களைச் செய்துள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ வங்கியின் YONO செயலியில், வங்கியில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் மட்டுமே உள்நுழைய முடியும்.. அதாவது, இப்போது நீங்கள் வேறு எந்த எண்ணிலிருந்தும் வங்கியின் சேவையைப் பெற முடியாது. ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து வாடிக்கையாளர்களை காப்பாற்ற வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.. எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது வசதிகளை […]
’உங்கள் பணம் வங்கிக் கணக்கில் சேர்ந்துவிடும்’..!! எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு..!!

You May Like