உயர் நீதிமன்றத்திற்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்த வழக்கறிஞர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் அசாமில் பரபரப்பு ஏற்படுத்தியது.
அசாமை சார்ந்த வழக்கறிஞர் மகாஜன். இவர் அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு ஒரு ஜாமீன் மனு விசாரணை தொடர்பாக ஆஜராக வந்திருந்தார். அப்போது அவர் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்ததால் அதிருப்தி அடைந்த நீதிபதி அங்குள்ள காவலர்களை அழைத்து அவரை நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றுமாறு கூறினார்.
மேலும் அவர் ஆஜராக வந்த ஜாமீன் மனுவையும் ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தார். மேலும் இந்த நடவடிக்கை தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிபதி கல்யாண் ராய் சுரானா ” நன்கு கற்றறிந்த வழக்கறிஞரான பிகே மகாஜன் தனது மனுதாரருக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு ஜீன்ஸ் பேண்ட் அணிந்து வந்தது கடும் அதிர்ச்சியை அளிக்கிறது. மேலும் இது நீதிமன்ற நடவடிக்கைகளை அவமதிப்பது போன்ற ஒரு செயலாகும். இதனால் அவர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர் ஆஜராக வந்த வழக்கும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ” தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றத்தின் தலைமை பதிவாளர் ஆகியோரின் கவனத்திற்கு இந்த விஷயத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவித்தார் நீதிபதி . மேலும் இந்த சம்பவம் குறித்து மிசோரம்,நாகலாந்து மற்றும் அருணாச்சல பிரதேசத்தைச் சார்ந்த பார் கவுன்சில்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.