fbpx

சிக்கிம் வெள்ள பாதிப்பு…! 23 ராணுவ வீரர்கள் உட்பட 82 பேர் மாயம்…! 5 பேர் உடல் சடலமாக மீட்பு…!

சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் லோனக் என்னும் மிக பெரிய ஏரி உள்ளது . இந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவில் மேகவெடிப்பு காரணமாக டீஸ்டா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதில் ராணுவ வீரர்கள்மாயமாகினர். அவர்களைத் தேடும் பணி தொடரும் சூழலில் இதுவரை 5 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 10 பேர் உயிரிழந்துள்ளனர், 23 ராணுவ வீரர்கள் உட்பட 82 பேர் காணாமல் போயுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு திடீரென ஆற்றில் தண்ணீர் அதிகரித்ததை அடுத்து, வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓட ஆரம்பித்தது. வடக்கு சிக்கிமில் உள்ள லோனாக் ஏரிக்கு மேலே திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டதால், லாச்சென் பள்ளத்தாக்கிற்குள் டீஸ்டா நதியில் இருந்து வெள்ளம் தன்கிழமை பெருக்கெடுத்து ஓடியது.

சுங்தாங் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட பின்னர் நிலைமை மோசமடைந்தது, இது முகாம்கள் மற்றும் வாகனங்களை மூழ்கடித்தது, இதன் விளைவாக 23 இராணுவ வீரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். இனி திடீர் வெள்ளத்தால் ஆபத்து இல்லை என்றும் மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

பாக்யாங், காங்டாக், நாம்சி, மங்கன் ஆகிய மாவட்டங்களில் வரும் 8-ஆம் தேதி வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும் மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது. சிக்கிம் முதல்வர் பிஎஸ் தமங் சிங்டம் பகுதிக்குச் சென்று திடீர் வெள்ளப் பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்தார்.

Vignesh

Next Post

இன்பச் செய்தி...! அரசு விடுதி மாணவர்களுக்கு உதவித்தொகை ரூ.1,400 ஆக உயர்வு...! முதல்வர் அறிவிப்பு...!

Thu Oct 5 , 2023
விடுதியில் தங்கையை படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1,400 ஆக உயர்த்தி முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்காக விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் கல்லுாரி மாணவர்களுக்கு தலா ரூ.1,100, பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.1000 வீதம் உணவு உதவித் தொகை வழங்கப்பட்டு […]

You May Like