fbpx

முடிவுக்கு வந்தது சர்ச்சை!… ஹிஜாப் தடையை நீக்கி முதல்வர் அதிரடி!… ஆடை அணிவது அவரவர் தனிப்பட்ட விருப்பம்!

கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில் அதனை நீக்கி முதல்வர் சித்தராமையாக அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெற்றது. முதல்வராக சித்தராமையாக 2வது முறையாக பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்தது. முதல்வராக பசவராஜ் பொம்மை இருந்தார். அந்த சமயத்தில் அதாவது கடந்த ஆண்டு கர்நாடகாவில் உள்ள பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து பெரும் போராட்டம் வெடித்தது. கர்நாடகாவில் கொந்தளிப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து கர்நாடகாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. ஹிஜாப் தடை நீக்கப்படவில்லை.

இந்நிலையில் தான் தற்போது கர்நாடகா கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மைசூரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் சித்தராமையா முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அப்போது, கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுதொடர்பான உத்தரவை திரும்ப பெற கூறியுள்ளேன். இனி நீங்கள் ஹிஜாப் அணிந்து செல்லலாம். ஆடை அணிவது மற்றும் உணவு சாப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். மக்கள் யார் வேண்டுமானாலும் அவர்களுக்கு பிடித்த உடையை அணியலாம். இதை ஏன் நாங்கள் தடுக்க வேண்டும்” என்றார்.

மேலும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛பிரதமர் நரேந்திர மோடி சப் ஹா சாத்-சப் ஹா விகாஷ் என்பதன் மூலம் மக்களை உடை, ஜாதி அடிப்படையில் பிரிக்ககிறார். இப்படி சமுதாயத்தை உடைக்கும் வேலையை பாஜக செய்து வருகிறது. மாநிலத்தில் ஹிஜாப் அணிய போடப்பட்ட தடையை திரும்ப பெற நான் கூறியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளின் விவரம்..!! இனி ஈசியா தெரிஞ்சிக்கலாம்..!! புதிய இணையதளம் தொடக்கம்..!!

Sat Dec 23 , 2023
வீட்டு வசதி வாரிய திட்டங்களில், விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளின் விவரங்களை எளிதாக அறிய, புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் அறிவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன. கோட்ட அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்களில், வீடுகள் இருப்பு அறிய, அந்த அலுவலகத்தை பொதுமக்கள் அணுகுகின்றனர். ஆனால், அங்குள்ள பணியாளர்கள் முறையான விவரங்களை வழங்குவதில்லை. இதேபோன்று, வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தவணை செலுத்துவதிலும், வாடகை செலுத்துவதிலும் […]

You May Like