அதானி குழுமத்தை அம்பலப்படுத்தியதற்காக அறியப்பட்ட பெயர் ஹிண்டன்பர்க் ரிசர்ச். தற்போது இந்தியா சம்பந்தப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க வெளிப்பாட்டைக் குறிப்பிட்டுள்ளது. ஹிண்டன்பெர்க் என்பது அமெரிக்காவில் செயல்பட்டு வரும் முதலீடு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் நிறுவனாகும். இதன் முழுப்பெயர் ஹிண்டன்பெர்க் ரீசர்ஜ் எல்எல்சி.
கடந்த ஆண்டு ஜனவரியில், ஹிண்டன்பர்க் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதானி குழுமம் பங்கு சந்தையில் மோசடி செய்து லாபம் ஈட்டியதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதானி குடும்பத்துக்கு மிக அதிக அளவில் கடன் இருப்பதாகவும் பங்கு மதிப்புகளை உயர்த்தி காட்டி அதானி நிறுவனங்கள் அதி கடன் பெற்று பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. இதனையடுத்து, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது. ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அழைப்பும் விடுத்திருந்தது.
இந்த குற்றச்சாட்டு தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பெரும் பணக்காரரான அதானி குழும பங்குகளின் விலை குறைய தொடங்கியது. ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை என்பது அதானி குழுமத்துக்கு பெரும் பிரச்சனையை உருவாக்கியது. அதனைத்தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ள அறிக்கை மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹிண்டன்பெர்க் தனது எக்ஸ் பக்கத்தில், “Something big soon India” என தெரிவித்துள்ளது. அதாவது விரைவில் இந்தியா பற்றிய பெரிய விஷயம் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது. இதனால் இந்த ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை யாரை பற்றியதாக இருக்கும்? எந்த தொழில் அதிபர் அல்லது எந்த பங்கு சந்தை முதலீடு தொடர்பான விபரமாக இருக்கும்? என பல ஊகங்கள் எழுந்தது.
இந்த நிலையில் அதானி குழுமம் முறைகேட்டிற்குப் பயன்படுத்திய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின்(SEBI) தலைவர் மாதபி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருப்பதாக ஹிண்டன்பர்க் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்ததாலே அதானி குழுமம் மீது செபி தலைவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளது. அதானி குழுமம் முறைகேடு விவகாரத்தைச் செபி விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது அதன் தலைவர் மீதே ஹிண்டன்பர்க் நிறுவனம் பரபரப்பு புகார் கூறியுள்ளது இந்தியா முழுவதும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இதற்கு அதானி குழுமம் மறுப்பு தெரிவித்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் தீய உள்நோக்கம் கொண்டவை. பொய்யானவை. பொதுவெளியில் உள்ள தகவல்களை தனது தனிப்பட்ட ஆதாயத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை மறுசுழற்சி செய்து கூறியுள்ள அந்த குற்றச்சாட்டுகளை நாங்கள் முழுமையாக நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்தது.
செபி தலைவர் மாதபி பூரி புச் வெளியிட்ட விளக்கத்திற்கு பிறகு ஹிண்டன்பர்க் நேற்று இரவு தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- செபி தலைவர் மாதபி புச் எங்களின் அறிக்கைக்கு கொடுத்த பதில், சில முக்கியமானவைகளை ஒப்புக்கொள்வதோடு, புதிதாக பல முக்கிய கேள்விகளையும் எழுப்புவதாக அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
மேலும், தாங்கள் எழுப்பிய விஷயங்கள் தொடர்பாக, செபி தலைவர் முழுமையான, வெளிப்படையான பொது விசாரணைக்கு உறுதியளிக்கிறாரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மாதபி புச்சின் பதில், மொரீசியஸ்/பெர்முடா நிதி அமைப்பில் வினோத் அதானியுடன் முதலீடு செய்ததை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதாக உள்ளது. தனது கணவரின் இளம் வயது தோழருடன் இந்த ஃபண்ட் நடத்தப்பட்டதும் அப்போது அவர் அதானி இயக்குனராக இருந்ததையும் உறுதி செய்துள்ளார். அதானி விவகாரம் தொடர்பான முதலீட்டு நிதிகளை செபியின் பணியாக உள்ளது. எனவே, இது வெளிப்படையாக இரட்டை ஆதாயம் பெறும் விவகாரம் ஆகும்” என்று தெரிவித்துள்ளது.
Read more ; இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சி!. வங்கதேசத்தினர் 11 பேர் கைது!